2004-ஆம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம். ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்றபடம் "அடிதடி.' மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணைந்துள்ள படம் "சினிமா நடிகனும் அரசியல்வாதியும்.' இப்படத்தை சுந்தரி பிலிலிம்ஸ் சார்பாக எம். ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.

Advertisment

sathyaraj

இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ்.

ஒரு சினிமா நடிகன் அரசியல் வாதியாக ஆனால் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பது அரசியல் நையாண்டியுடன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது.